Type Here to Get Search Results !

என்னது 7 ஆயிரம் வருஷம் முன்னாடியே இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடிச்சாங்களா



                         விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியர்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துவைத்திருந்தனர். பரத்வாஜ் முனிவர், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ள ஸ்லோகத்தில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கும், மற்றொரு கண்டத்திற்கும், ஏன் மற்றொரு கோளுக்குமே, விமானங்களை செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். இதற்காக 97 புத்தகங்களை உதாரணத்திற்கு காண்பித்துள்ளார்.
              விமான தயாரிப்பில் முன்னோடி விமான தயாரிப்பு குறித்த 500 வகை கொள்கைகள் குறித்து சமஸ்கிருத ஸ்லோகங்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால், தற்போதைய விஞ்ஞானிகள் கூட 100 கொள்கைகளைத்தான் கண்டுபிடித்துள்ளனர். 8 பிரிவுகளின்கீழ் விமான தயாரிப்பை கற்றுத்தரும் நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. தற்போதைய விமானங்களைவிட சக்தியிலும், சொகுசிலும், இந்திய முன்னோர்கள் கண்டுபிடித்த விமானங்கள் சிறப்பானவையாக இருந்துள்ளன. இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.
தாழ்வுமனப்பான்மையில் இந்தியர்கள்? ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தவர்களில் பெரும்பாலானோர், இன்றைய இந்திய விஞ்ஞானிகள், பழைய கால சமஸ்கிருத இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும், தகவல்களை சேகரித்தால், நவீன கண்டுபிடிப்புகளுக்கு அது உதவிகரமாக இருக்கும் என்று, பரிந்துரைத்துள்ளோனர். மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர், ராஜன் வேளுக்கர் கூறுகையில், வேதங்களை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, வேதங்களில் என்ன உள்ளது என்பைத படித்து பார்ப்பது நல்லது என்றார். விஞ்ஞானி விஜய் பட்கர் கூறுகையில், தற்போதுள்ள இந்தியர்கள் அடிமை மனோபாவத்தில் உள்ளனர். வெளிநாடு நமது திறமையை ஒப்புக்கொண்டால்தான் நாம் திறமைசாலி என்று நாமே ஒப்புக்கொள்ளும் நிலையில்தான் நமது மனோபாவம் உள்ளது. வெளிநாட்டினர் செய்த பிறகுதான் நாம் அதை பின்பற்ற தொடங்குகிறோம்" என்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad