தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது !!!




தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு உற்சாகம் தரும் பானங்களில் ஒன்றான காபி மற்றும் டீ குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், தென்கொரியா தலைநகர் சியோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள்.

பொதுவாக ரத்த நாளங்களில் கடின தன்மை அல்லது ரத்து குழாய்கள் சுரங்குவதால் அடைப்பு ஏற்படும்.

அதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. ஆனால் தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறை என கண்டறிந்துள்ளனர்.

காபியில் உள்ள வேதி பொருட்கள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி ரத்த ஓட்டம் சீராக ஓட வழிவகை செய்கின்றன. அதனால் மாரடைப்பு ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url