ரோமியோ ஜூலியட்' படத்தின் இசை மார்ச் 12ல் வெளியீடு: ஏப்ரல் 10ல் படம் ரிலீஸ்



                                      ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ரோமியோ ஜூலியட்' திரைப்படத்தின் இசை வெளியீடு மார்ச் 12 -ல் நடைபெறுகிறது. ஏப்ரல்10-ல் திரைப்படம் வெளியாகிறது.

ஃபேன்டஸி கலந்த ஜாலியான காதல் கதையில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. அறிமுக இயக்குநர் லக்‌ஷ்மன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே சூர்யாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1947 களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவும், 2025 -ல் தன் வாழ்க்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசிக்கும் ஹீரோயினுக்கும் உள்ள சுவாரஸ்யமான காதல்தான் படத்தின் மையக் கதை.

பூனம் பஜ்வா, வம்சி கிருஷ்ணா, விடிவி கணேஷ், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'ரோமியோ ஜூலியட்' டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இமான் இசையில் அனிருத் பாடிய டண்டனக்கா பாடல் சமீபத்தில் வெளியாகி, மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கிறது.

இந்நிலையில், 'ரோமியோ ஜூலியட்' படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 12 அன்று நடைபெற உள்ளது. திரைப்படம் ஏப்ரல் 10-ல் வெளியாகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url