அம்மாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடல்- அப்பாவின் நிலை

#முகம் தெரியா ஆணின்  சோக கதை#

அடுத்த மாசம் ‪#‎Annual_Exam‬ வரப் போகுதா... வீட்ல கொஞ்ச நாளா ஒரே பரபரப்புதான்... என் பொண்ணுக்கு மாடல் எக்ஸாம் வேற நடந்துகிட்டு இருக்கு. நேத்து அம்மாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடல்:-
‪#‎சங்கீதா‬: ஏய்... என்ன மாடல் எக்ஸாம் எல்லாத்துலயும் மார்க் இவ்வளவு கம்மியா வாங்கி இருக்க... ஃபர்ஸ்ட் ரேங்க் போச்சா??
‪#‎காவியா‬: இல்லமா... எல்லாருமே இப்படிதான் மார்க் வாங்கியிருக்காங்க...!
சங்கீதா: நான் கேக்குற கேள்விக்கு எல்லாம் மொதல்ல பதில் சொல்லு! திப்பு சுல்தான் யாரு?
காவியா: ??????
சங்கீதா: பதிலையே காணோம்! ஜான்சி ரானி யாரு?
காவியா: தெரியலமா???
சங்கீதா: சரி... கப்பலோட்டிய தமிழர் யாரு...??
காவியா: அம்மா பசிக்குதுமா....!!
சங்கீதா: எருமை மாடு... எருமை மாடு... எப்ப பாரு அவங்கப்பன மாதிரி டீவியே கதின்னு கிடக்கிறது... போகோ சேணல், சுட்டி டிவினு எப்ப பாரு டிவிதான். (என்னை ஓரக் கண்ணால் பார்த்தபடி) இனிமே டிவிய யாராவது போடுங்க விளக்குமாற தூக்குறேன்!!
காவியா: இத்தனை கேள்வி என்னை கேட்டீங்கல்ல... ஒரே ஒரு கேள்வி நான் கேக்குறேன் பதில் சொல்லுங்க!
சங்கீதா: என்னடி கேக்க போற? கேளு!
காவியா: உங்களுக்கு ‪#‎சினேகா‬ ஆன்ட்டிய தெரியுமா??!
சங்கீதா: தெரியாதே... யார்டி அது??
காவியா: இதுக்குத் தான் சொல்றது... எப்பவும் டிவி சீரியலையே பார்த்துகிட்டு இடுக்காதீங்கன்னு, ‪#‎அப்பாவையும்‬கவனிங்கனு....!!
சங்கீதா: எங்கடி ஒங்கப்பன....??
இதுக்கு மேலயுமா நான் அங்க உட்க்கார்ந்திருப்பேன்!!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )