Type Here to Get Search Results !

கல்லாதது கடலளவு...

கல்லாதது கடலளவு...
நம்ம லேப்டாப் சார்ஜர் கேபிள், செல்போன் சார்ஜர் கேபிள், கம்ப்யூட்டர்ல மானிட்டர் கேபிள் இதுமாதிரி வயர்களில் ஒரு முடிச்சுப்போல ஒரு இடம் இருக்கிறதை பாத்திருப்போம். இது என்னவா இருக்கும், எதுக்கு இந்தக் கட்டின்னு அடிக்கடி தோணும். இன்னிக்குத் தெரிஞ்சு போச்சு.
சார்ஜர்ல இருந்து மின்சக்தி கடத்தப்படும்போது அதிலிருந்து எலக்டிரோமோடிவ் சக்தி கிளம்பும். அது ரேடியோவேவ் அலைகளாக கேபிளுக்கு வெளியே பரவும்போது பக்கத்தில் இருக்கிற மற்ற சாதனங்களில் தாக்கத்தை உண்டாக்கும். உதாரணமாக, ரேடியோ அல்லது டிவியின் அலைகளில் தடங்கல் செய்யும். தவிர, இந்த சக்தியின் காரணமாக மின்சக்தியும் கொஞ்சம் வீணாகும். அதனால் சார்ஜ் ஆகிற நேரமும் அதிகரிக்கும்.
இதைத் தடுப்பதுதான் இந்த முடிச்சு. இதுக்குப் பேரு ஃபெர்ரைட் பீட் அல்லது ஃபெர்ரைட் சோக் - ferrite choke or ferrite bead - இந்த சோக் அல்லது பீட் எனப்படும் சிலிண்டருக்குள் சின்னதா ஒரு காயில் கட்டியிருக்கும். அது ரேடியோவேவ் அலைகள் வெளியேறாமல் தடுக்கும். சார்ஜரோட வேலை சார்ஜ் செய்வது மட்டுமே. அதையும் செய்ய வைக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad