Type Here to Get Search Results !

ராஜ்யசபாவில் தி.மு.க.,-அ.தி.மு.க., மோதல்

புதுடில்லி: இலங்கை கடற்படையினரால் , தமிழக மீனவர் கைது செய்யப்படுவது குறித்து எழுந்த விவகாரத்தில் ராஜ்யசபாவில் தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, கச்சத்தீவு மீட்பில் முடிவு ஏற்படாமல் உள்ளது. என தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி., திருச்சி சிவா பேசினார். இதற்கு பதில் அளிக்க அ.தி.மு.க., எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேச எழுந்தார். அப்போது மாண்பு மிகு அம்மா இது தொடர்பாக மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் பல முறை கடிதம் அனுப்பியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில் மாநில அரசின் தெளிவான நிலையை தெரிவித்துள்ளோம். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எழுந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. 

தொடர்ந்து அவைத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கீட்டினை தொடர்ந்து அமைதி ஏற்பட்டது. 



'ராமர் கோவில் பிரச்னை : உத்தரபிரதேச கவர்னராக இருக்கும் ராம்நாயக், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 



இந்த பிரச்சனை லோக்சபாவில் எழுப்பபட்டது. மேலும், பா.ஜ., எம்.பி.,யான சாக்ஷி மகராஜ், கோட்சே ஒரு தேசியவாதி என்ற அவரது கருத்துக்கும், காங்., சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சாக்சி அவையில் இந்த வார்த்தையை திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும், 3 முறை தெரிவித்தார். தொடர்ந்தும் அமளி ஏற்பட்டது. இதற்கு சபாநாயகர் சுமித்ரா குறுக்கிட்டு என்ன சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என விரும்புகிறீர்களா என்று உறுப்பினர்கள் நோக்கி கேட்டார். இதன் பின்னர் அமைதி ஏற்பட்டது. 



சமாஜ்வாடி கட்சியின் அகர்வால் கூறுகையில், 'ராமர் கோவில் பிரச்னையில் இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும், அதை அவர் தவிர்த்திருக்கலாம்,' என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் கே.சி.தியாகி கூறுகையில், 'அரசியலமைப்பு சட்டத்தை மீறிய ராம்நாயக்கை, ஜனாதிபதி கவர்னர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும்,' என்று கோரி உள்ளார். 

பா.ஜ.,வின் எஸ்.என்.., சிங்,,'ராம்நாயக் ராமரின் பக்தராக இருப்பது தவறா? ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று அவர் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது' என்று கேட்டுள்ளார். இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற ராம்நாயக்கின் கோரிக்கையில் எந்த முரண்பாடும் இல்லை,' எனறு சிவசேனா கூறி உள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad