Type Here to Get Search Results !

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பு : வென்றது விஜய் . இது உண்மையா ?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பு வார இதழ் முதல் சமூக வலைத்தளம் வரை நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஒரு வார இதழ் இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டது . அதன் முடிவு , வென்றது விஜய்.

இக்கருத்துக் கணிப்பின் முடிவு சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. ஒரு புறம் ரஜினி ரசிர்கள் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே , இப்படி ஒரு கருத்துக் கணிப்பு தவறே என்றும், மறுபுறம் அஜித் ரசிகர்கள் இந்த கருத்துக் கணிப்பு முடிவில் தவறு நடந்துள்ளது , உண்மையில் வென்றது அஜித் என்றும் புலம்பி தள்ள , விஜய் ரசிர்கள் உற்சாகத்தில் வெற்றியை கொண்டாடுகின்றனர் .

இருவருக்கும் பதிவான ஆதரவு வாக்குகளின் வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் மேல் என்று கூற படுகிறது. குறிப்பாக சொல்ல போனால் இது போன்ற கருத்துகணிப்புகள் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே இருக்கும் மோதலை அதிகப்படுத்துகிறது.

மேலும் அஜித் தரப்பிடம் இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் பற்றி தெரிவிக்கவில்லை என்றும் , அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவரை தொடர்பு கொண்டு இதை தெரிவித்தாலும் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை என்பது அனைவர்க்கும் தெரிந்த ரகசியம் . ஆனால் இந்த முடிவு உண்மையே இதில் எந்த தகிடுததமும் நடக்க வில்லை என்பதே பெரும்பாலோர் கருத்து .   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad