மைதானத்தில் அநாகரிகம்: பாகிஸ்தான் வீரர்கள் இருவர் சஸ்பெண்ட்

புவனேஸ்வரில் நடைபெற்ற ஹாக்கி அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது. அந்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் கொதிப்படைந்த இந்தியா ஹாக்கி சம்மேளனம், பாகிஸ்தான் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் சர்வதேச போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தை மிரட்டியது.

இதற்கு அடிபணிந்த சர்வதேச ஹாக்கி சம்மேளனம் முகமது தவ்பிக், அம்ஜத் அலி ஆகிய இரண்டு பாகிஸ்தான் வீரர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால், இவர்கள் இருவரும் ஜெர்மனிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட முடியாது எனத் தெரிகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url