Type Here to Get Search Results !

இந்திய தண்டனை சட்ட பிரிவு 309 ரத்தானால் சமூக ஆர்வலர் சானு சர்மிளா உயிருக்கு ஆபத்து

கோல்கட்டா: கடந்த, 2000ம் ஆண் டில், மணிப்பூரில் உள்ள மலோம் கிராமத்தில், பாதுகாப்புப் படையின ரால், பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத் தின் கீழ், பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர். அதனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்போது முதல், சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவர் மீது, தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படுவதும், பின், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கிறது. 

இந்நிலையில், தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 309ஐ நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சர்மிளா, இனி, இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, அவர் உண்ணா விரதத்தை கைவிட வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், 'சர்மிளா உண்ணாவிரதம் இருப்பது தொடரும்' என, அவரின் சகோதரர் இரோம் சிங்காஜித் கூறியுள்ளார். அதேநேரத்தில், 'தற்கொலை முயற்சிக்கு தண்ட னை வழங்கும் சட்டப்பிரிவு ரத்தாவதால், போலீசார் சர்மிளாவை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் போது, சர்மிளாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, அவரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சர்மிளா இதுவரை, தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கும் சட்டப் பிரிவின் கீழ் தான் கைது செய்யப்பட்டு வந்தார். அந்தச் சட்டப் பிரிவு ரத்தானால், அவர் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அத்துடன் அவரின் விவகாரத்தில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் செயல்படுவோம்.
சந்தோஷ் மாச்செரியா, 
மணிப்பூர் கூடுதல் டி.ஜி.பி.,
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad