ஆர்யாவுக்கு நல்ல நடிகர் என்ற பட்டம் கொடுத்த நடிகைகள்



அது என்னதான் மாயமோ தெரியவில்லை. எந்த நடிகர்களிடமும் மயங்காத நடிகைகளும்கூட ஆர்யாவைக்கண்டால் மயங்கி விடுகிறார்கள். அதுவும் நடிகைகளை ஒரே நாளில் பிக்கப் செய்யக்கூடிய ஜகஜால கில்லாடி என்று சக நடிகர்களே ஆர்யாவைப்பற்றி புட்டு புட்டு வைக்கிறார்கள். ஆனால், அப்படி அவர்களை எந்தெந்த நடிகைகளை ஆர்யாவுடன் இணைந்து பேசுகிறார்களோ. அவர்கள் அனைவருமே ஆர்யாவை ரொம்பவே புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அதில் அனுஷ்கா, நானும், ஆர்யாவும் ஹோட்டலில் கெட்ட ஆட்டம் போட்டதாக சொன்னார்கள். ஆனால், அப்படி ஆடும் அளவுக்கு நானோ, ஆர்யாவோ தவறானவர்கள் அல்ல. இரண்டு பேருமே ரொம்ப டீசன்டாக பழகி வருகிறோம் என்றார். அதேபோல், நயன்தாரா, அஞ்சலி, டாப்சி உள்ளிட்ட மற்ற நடிகைகளும் ஆர்யா ரொம்ப கேசுவலாக பழகக்கூடியவர். அதுதான் மற்றவர்களின் பார்வையில் தவறாக தெரிகிறது என்று ஆர்யாவுக்கு சான்றிதழ் கொடுத்து விட்டனர்.

இந்த சூழ்நிலையில், தற்போது ஆர்யாவுடன் புறம்போக்கு படத்தில் நடித்து வரும் கார்த்திகா ஆர்யாவைப்பற்றி கூறுகையில், ஆர்யாவை மற்ற நடிகைகளுடன் இணைத்து வெளியான செய்திகளைப்பார்த்து, அவர் ஒரு மாதிரியான ஜாலிப்பார்ட்டியாக இருப்பார் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால், அவருடன் நெருங்கிய பழகியபிறகுதான் அவர் அந்த மாதிரி ஆள் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

புதிதாக நண்பர் ஆனவர்களாக இருந்தால்கூட, அவர் ரொம்ப நாட்கள் பழகியதைப்போன்றுதான் பேசுவார். அதோடு, நடிகைகளை மதிக்கக்கூடியவர். அதனால் அவரது கேரக்டரை தெரியாமல் இருந்தபோது அவரைப்பற்றிய வெளியான செய்திகளை நம்பிய நான், இப்போது அவை வெறும் வதந்திகள் மட்டுமே என்பதை புரிந்து கொண்டே என்கிறார் கார்த்திகா.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url