Type Here to Get Search Results !

சுஷாந்த் சிங் ராஜ்புட் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அவரது முன்னாள் உதவியாளர் !!!!!!!



பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தன் அறைக்கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று பிரபலங்கள் சிலர் தெரிவித்துள்ளனர். சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது புகார்கள் குவிகின்றன. தன் மகனை தற்கொலைக்கு தூண்டியதே ரியா தான் என்று சுஷாந்தின் தந்தை கிருஷ்ண குமார் சிங் பாட்னா காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளார்.



ரியா வந்த பிறகே சுஷாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அவர் வீட்டில் வேலை செய்த இரண்டு பேர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் வீட்டில் 3 ஆண்டுகளாக வேலை செய்த அன்கித் ஆச்சார்யா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நான் சுஷாந்த் அண்ணாவின் நிழல் போன்று இருந்தேன். அவர் வீட்டில் நான் 3 ஆண்டுகள் வசித்தேன். சுஷாந்த் எப்பொழுதுமே தன் அறைக்கதவை உள்புறமாக பூட்டியதே இல்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

நான் கடந்த ஆண்டு என் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். ஆகஸ்ட் மாதம் திரும்பி வந்தபோது வீட்டில் வேலை பார்த்த அனைவரையும் மாற்றிவிட்டனர். சுஷாந்தின் புது பாதுகாவலர்கள் என்னை வீட்டிற்குள் நுழைய விடவில்லை. ரியா மேடம் தான் அனைவரையும் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்.

ரியா மேடம் ஷாப்பிங், உணவு, பூஜை பொருட்களுக்கு அதிகம் செலவு செய்வதாக புது பணியாளர்கள் தெரிவித்தனர். சுஷாந்த் வீட்டில் அடிக்கடி பூஜைகள் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த பூஜைகள் எதற்கு என்று தெரியவில்லை.

நான் சுஷாந்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்தேன். சுஷாந்த் என்னை தன் சகோதரர் போன்று நடத்துவார். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் என் கணக்கை தீர்த்தபோது அவர் வித்தியாசமாக இருந்தார். எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் சுஷாந்த் முகத்தில் சிரிப்பே இல்லை. கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தது. அவரை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றார்.

சுஷாந்த் வழக்கு பற்றி மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் நாராயண் ரானே கூறியதாவது,



இது மிகவும் முக்கியமான வழக்கு. ஆனால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்புகிறார்கள். இது தற்கொலை அல்ல மரணம். 50 நாட்கள் சென்றுவிட்டது. ஆனால் உலகப் புகழ் பெற்ற மும்பை போலீசாரால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

ரியா சுஷாந்த் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். ரியா தன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறார். அவர் திடீர் என்று தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று போலீசாருக்கு தெரியவில்லை.

20 நாட்களுக்கும் மேலாக சுஷாந்தை மிரட்டி வந்தது யார்?. அவர் தினமும் தன் சிம் கார்டை மாற்றியிருக்கிறார். இது குறித்து ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?. யாரையோ காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

சுஷாந்த் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு சூரஜ் பஞ்சோலியின் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் போலீசார் ஏன் விசாரணை நடத்தவில்லை?. யார் இந்த தினோ மோரியா?. அவர் வீடு சுஷாந்த் வீட்டிற்கு அருகில் இருக்கிறது.

பல அமைச்சர்கள் தினோ வீட்டிற்கு செல்கிறார்கள். பார்ட்டி நடந்த நாள் அனைவரும் தியோ வீட்டில் இருந்து சுஷாந்த் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சுஷாந்தின் முன்னாள் மேனேஜரான தியா சாலியன் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். திஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

போலீசார் ஏன் இது தொடர்பாக அமைதியாக இருக்கிறார்கள்? என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad