Type Here to Get Search Results !

ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட 'இவர்' தான் காரணமா?


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும் மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பிறகு அவரின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அமிதாப் பச்சன் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அமிதாப், அபிஷேக்கை போன்று இல்லாமல் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அமிதாபின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை.
பச்சன்கள் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும் அவர்களுக்கு சொந்தமான ஜல்சா, ஜனக், பிரதிக்ஷா, வத்சா ஆகிய நான்கு பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் மற்றும் அபிஷேக்கிற்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை, அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிதாபும், அபிஷேக்கும் மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து அமிதாப் வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு எப்படி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அபிஷேக் பச்சன் தான் நடித்துள்ள ப்ரீத்- இன்டு தி ஷேடோஸ் வெப் தொடருக்கான டப்பிங் பணிக்காக தினமும் ஸ்டுடியோவுக்கு சென்று வந்தார். அபிஷேக் மாஸ்குடன் டப்பிங் ஸ்டுடியோவுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அபிஷேக் டப்பிங் பேச சென்ற இடத்தில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து அவருக்கு தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன் வீட்டில் வேலை செய்யும் 16 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் அபிஷேக்குடன் சேர்ந்து டப்பிங் பேசிய நடிகர் அமித் சாதுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அமித்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அபிஷேக்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவர் டப்பிங் பேசிய ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பச்சன்களுக்காக கொல்கத்தாவில் இருக்கும் அமிதாப் பச்சன் ரசிகர் மன்றம் சார்பில் மகா ம்ரிதுஞ்சய யாகம் நடந்து வருகிறது. அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் குணமடையும் வரை தொடர்ந்து யாகம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஹென்சா கோவிலில் தான் அந்த யாகம் முதலில் துவங்கப்பட்டது. அங்கு நீர் தேங்கியதால் யாகம் நடத்தும் இடம் மாற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் யாகம் நடக்கும் இடத்தில் ஒரு சில ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அமிதாப் பச்சன் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சஞ்சோய் பட்டோடியா கூறியதாவது,

பச்சன் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் குணமாகும் வரை நாங்கள் யாகத்தை தொடர்வோம். லாக்டவுன் துவங்கியதில் இருந்து பச்சன் குடும்பத்திற்கான ஷாஹென்ஷா கோவிலுக்குள் யாரையும் அனுமதிப்பது இல்லை. யாகம் நடக்கும் இடத்திலும் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள்.
பச்சன் சார் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் அன்பு பற்றி தெரியும். அமிதாப்ஜி, அபிஷேக் பச்சன், ஜெயா ஜி, ஐஸ்வர்யா ஜிக்கு எங்களை தெரியும் என்றார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad