Type Here to Get Search Results !

ஆண்குறியில் வலி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள் !!!!!



ஆண் பிள்ளைகள் எந்த வயதிலும் தனது ஆண் உறுப்பில் வலியை உணரக்கூடும். இலேசான காயம் உண்டாகும் போது உறுப்பில் வலி இருக்கலாம். ஒருவித அசெளகரியத்தை உணரலாம். இது ஆண்குறி வலி என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வலி உபாதை இருந்தால் அதற்கு காரணம் பலவாகவும் இருக்க கூடும்.

ஆண்குறிகளில் வலி உண்டாக காயம் போன்ற வெளிப்படையான விஷயங்கள் தாண்டி மறைமுக காரணங்களும் இருக்கலாம். இவை படிப்படியாக தொடரும் போது காரணங்களை கண்டறிவது கடினமாக இருக்கிறது. நோய்த்தொற்றுகள் எளிதாக தாக்குமிடங்களில் ஆண்குறியும் ஒன்று. திருமணத்துக்கு பிறகு ஆண்கள் தங்கள் உறுப்பில் வலியை உணர்ந்தால் அது மனதளவான ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்கிறது.

ஆண்குறியில் வலி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாது. வலி உண்டாகும் இடத்தைப் பொறுத்து ஆண்குறி வலியின் அறிகுறிகளும் வேறுபடுகின்றன. வலி ஆண்குறியின் மையப்பகுதியிலும் உண்டாகலாம். ஆண்குறியில் தலை மற்றும் மொட்டு பகுதியிலும் உண்டாகக்கூடும். ஆண்குறி வயிற்று சுவரோடு இணைந்திருக்கும். இந்த வேர்ப்பகுதியில் வலி உணர்வு இருக்கும். அதாவது ஆண்குறியின் வேர்ப்பகுதியிலும் அடி வயிற்றிலும் அதிகமாகவே இருக்கும்.

ஆண்குறியில் உண்டாகும் வலியானது திடீரென்று தொடங்கலாம். நாளடைவில் வலி உணர்வு அதிகரிக்கலாம். இந்த வலி உணர்வு அதிகமாகவும், நடுத்தரமாகவும், வேகமாகவும் கூட இருக்கலாம். இந்த வலியானது ஆண்கள் உடலுறவு மேற்கொள்ளவும், சிறுநீர் கழித்தலிலும் என சிக்கல்களை நீடிக்க செய்யும்.



உடலுறவு செய்யும் போது வலி உண்டாகும் பிரச்சனையில் விந்துவில் ரத்தம் வெளிவருவதை பார்க்கலாம். ஆண்குறியில் கண்ணுக்கு தெரியாத சிறு சிறு வெடிப்புகள் நிற மாற்றத்தோடு இருக்கும். உடலுறவு கொள்ளும் போது விறைப்புத்தன்மை அடைவதிலும் சிக்கலை சந்திக்க நேரிடும். வெகு சிலருக்கு உடல் உறவின் போது ஒருவித சத்தமும் கேட்கலாம். இன்னும் சிலருக்கு ஆண்குறி விறைப்புத்தன்மையானது தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கவும் செய்யலாம். இந்த வலியானது வீக்கத்தை உண்டாக்கும்.

உடல் உறவின் போது விந்து முந்துதல் பிரச்சனை வரக்கூடும். இந்த பிரச்சனையோடு ஆண் குறியில் வலியும் இருந்தால் இது ஆண்குறி வலி சம்பந்தப்பட்ட அறிகுறியாகவே இருக்க வேண்டும். ஆண்குறியில் அரிப்பு, சிறு சிறு கொப்புளங்கள், புண்கள், காயங்கள் போன்ற பிரச்சனைகளும் ஆண்குறி வலியோடு தொடர்பு கொண்டவையே.

அதோடு சிறுநீர் கசிவதிலும் பிரச்சனைகளையும் மாற்றத்தையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது சிரமம், எரிச்சல், சிறு சிறு துளியாக பிரிவது போன்ற உபாதைகளும் உண்டாகிவிடும். பலரும் இதை சிறுநீரக தொற்று என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால் இதுவும் ஆண்குறி வலியோடு தொடர்பு கொண்டதே. சமயங்களில் இது சிறுநீர்ப்பாதை அழற்சியாகவும் இருக்கலாம்.

ஆண்குறியின் முன் தோல் பகுதியில் திரவம் சேர்வதும் கூட ஆண்குறி வலியின் அறிகுறிகளே. இடுப்புப்பகுதியில் கட்டிகள் வருவது கூட ஆண்குறி வலிக்கான அறிகுறிகளே தான்.

ஆண்குறி வலியே பலவிதமான அறிகுறிகளை உடலில் காட்டும் போது இன்ன காரணத்தினால் தான் வலி உண்டாகிறது என்பதை பலவிதமான மருத்துவ வரலாறுக்கு பிறகு பல பரிசோதனைகளுக்கு பிறகு உரிய சிகிச்சை செய்வதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்.

இளவயதில் உண்டாகும் ஆண்குறி வலிக்கு காரணம் பெரும்பாலும் பாலியல் தொற்று காரணமாக உண்டாகலாம். குறிப்பாக பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்வதும், தொற்று இருப்பவர்களோடு உறவு கொள்வதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். இத்தொற்று வராமல் தடுக்க ஆண்களும் பாப்பிலோ வைரஸ் தடுப்பூசி எடுத்துகொள்வதும் நல்லது.



ஆண்குறியில் வலி என்பது உடல் நோயாக மட்டும் அல்லாமல் மனதளவிலும் பலவிதமான பாதிப்புகளை உண்டாக்கவே செய்யும். ஆண்குறி வலிக்கான காரணங்களை அறிந்ததும் புராஸ்டேட் சுரப்பி அழற்சியாக இருந்தால் வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆண்குறியின் முன் தோலில் அழற்சி இருந்தால் முன் தோல் அகற்றும் அறுவை சிகிச்சை முறை செய்யப்படுகிறது.

அன்றாட வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்களை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது நீராவி குளியல், உடற்பயிற்சிகள் போன்றவையும் வலியை குறைக்கும் சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad