Type Here to Get Search Results !

லெகிங்ஸ் அணியும்போது என்னனென்ன செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் !!!!!!!!




லெகிங்ஸ் பெண்களுக்கு மிக செளகர்யமான உடை என்றாலும் அதன்மீது பல விமர்சனங்கள் தலைகாட்டிக்கொண்டே இருக்கின்றன.

சரியான ஃபிட் முக்கியம்

1.ஒல்லியாக இருப்பவர்கள் :



கால் முட்டி மற்றும் இடுப்பெலும்பு துருத்திக்கொண்டிருக்கும் அளவுக்கு ஒல்லியாக இருப்பவர்கள் லெகிங்ஸ் பயன்படுத்தும்போது, இன்னும் ஒல்லியாகத் தெரிவீர்கள். அதனால் நீங்கள் லெகிங்ஸைத் தவிர்ப்பது நல்லது.

மாறாக, ஜெகிங்ஸ் அல்லது நேரோ ஃபிட் பேன்ட்ஸ் பயன்படுத்தலாம். இதன் மெட்டீரியல் சற்றே தடிமனாக இருப்பதால் ஒல்லியான தோற்றம் தெரியாமல் மறைப்பதுடன் டிரெண்டியாகவும் காட்டும்.

2. சராசரியான உடல்வாகு உடையவர்கள் :



உங்களுக்காகவே டிசைன் செய்யப்பட்டதுதான் லெகிங்ஸ் எனச் சொல்லும் அளவுக்கு உங்களுக்கு இது கச்சிதமாகப் பொருந்தும். ஆங்க்கிள் லெங்த், ஃபுல் லெங்த் என எந்த வடிவத்திலும், காட்டன், லைக்ரா, பனியன் க்ளாத் என எந்த மெட்டீரியலிலும் நீங்கள் லெகிங்ஸ் பயன்படுத்தலாம்.

ஆனால் உங்களுக்குப் பொருந்தக்கூடிய சரியான அளவில் தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். சற்றே கூடுதல் அல்லது குறைவான சைஸ் லெகிங்ஸை அணிந்தால் அடுத்தவர் கண்களை உறுத்துவது நிச்சயம்.

3. பூசிய உடல்வாகு உள்ளவர்கள் :



ஆங்காங்கே தொய்வாக இருக்கும் தசைப்பகுதிகள்தான் உங்களது முக்கியப் பிரச்னை. நீங்கள் லெகிங்ஸ் அணியும்போது எக்ஸ்ட்ரா ஜி.எஸ்.எம் (Grams per Square Meter) உள்ள மெட்டீரியலைத் தேர்வு செய்யுங்கள். அதாவது, சற்று தடிமனாக இருக்கும் மெட்டீரியலில் உள்ள லெகிங்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் வாங்கும் லெகிங்ஸில் உள்ள லேபிளில் காட்டன் மற்றும் லைக்ராவின் அளவுகள் சதவிகிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் காட்டனின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் லெகிங்ஸ் தடிமனாக இருக்கும்; லைக்ராவின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் லெகிங்ஸ் மிக மெல்லியதாகவும் ட்ரான்ஸ்பரன்ட்டாகவும் இருக்கும். அதைப் பயன்படுத்தும்போது தசைப்பகுதியின் தொய்வு வெளிப்படையாகத் தெரிந்து, காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

4. தொப்பை உள்ளவர்கள் :



உடலின் அளவுகள் சரியாக இருந்தாலும் தொப்பை மட்டும் பளிச்செனத் தெரிகிறதா? நீங்கள் லெகிங்ஸ் அணியும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்...

டம்மி டக்கருடன் இருக்கக்கூடிய லெகிங்ஸ் வகையைத் தேர்வு செய்யுங்கள். இந்த வகை லெகிங்ஸ் கடைகளில் கிடைப்பதைவிட ஆன்லைனில் பரவலாகக் கிடைக்கும்.

அனைத்து உள்ளாடைக் கடைகளிலும் டம்மி டக் பேன்டி கிடைக்கிறது. இதை அணிந்த பின் லெகிங்ஸ் அணிந்தால் தொப்பையை மறைக்கலாம்.

5. குண்டாக இருப்பவர்கள்:



நீங்கள் லெகிங்ஸ் என்ற உடையை மறந்துவிடுவது சிறந்தது. ஏனெனில் உங்களின் தொய்வான உடல்பாகங்களை, இறுக்கமான உடையான லெகிங்ஸ் வெளிப்படுத்திவிடும். லெகிங்ஸ் அணிய அதிக விருப்பம் இருந்தால் அதற்கு பதிலாக ஜெகிங்ஸ் அணியலாம்.

இது தடிமனாக இருப்பதாலும், உடலை இறுக்கிப் பிடிப்பதாலும் தொய்வான தசைப்பகுதியைச் சற்று மறைத்துக் காட்டும். ஆனால், இது மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதால் நாள் முழுவதும் அணிவதற்கு ஏற்றதல்ல.

நியூடு கலர் லெகிங்ஸ்:



மேக்கப்பிலிருந்து உடைவரை நியூடு கலர் டிரெண்டில் இருந்தாலும் நியூடு கலர் லெகிங்ஸ் அணிந்திருக்கும் நபர்களைப் பார்க்கும்போது முகம் சுளிப்போம். ஏனெனில், இது பேன்ட் அணியாதது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, பேஜ், ஸ்கின் கலர், வொயிட் கலர் போன்ற லெகிங்ஸுடன் நீளம் குறைவான டாப்ஸ் அணிந்தால் காண்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

ஒருவேளை டாப்ஸுக்கு நியூடு கலர் பாட்டம் அணிய வேண்டிய தேவை இருப்பவர்கள் நேரோ பேன்ட், ஜெகிங்ஸ், கேதரிங் பேன்ட், பட்டியாலா பேன்ட் என்று அணிவது சிறப்பு.

அல்லது, நியூடு கலர் லெகிங்ஸுடன் அனார்கலி, பாகிஸ்தானி குர்தா போன்ற நீளமான டாப்ஸை அணியலாம். சைடு ஸ்லிட் குறைவாக இருக்கும் டாப்ஸைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்வாகிற்குப் பொருத்தமான டாப்ஸ் :

ஒல்லியாக இருப்பவர்கள் நீளமான, சற்று லூஸ் ஃபிட் டாப்ஸ் அணிந்தால், லெகிங்ஸ் மூலம் ஒல்லியான கால்கள் வெளியே தெரியாமல் இருக்கும். சைடு ஸ்லிட்டும் நீளமாக இல்லாமல் இருப்பது அவசியம்.

உடலின் முதல் பகுதி நார்மலாகவும், இரண்டாம் பகுதி சற்று பெருத்தும் காணப்படும் ஆப்பிள் ஷேப் உடல்வாகு உள்ளவர்கள், மார்புப்பகுதிவரை ஃபிட்டாகவும், அதற்குக் கீழ் லூஸாகவும் உள்ள அனார்கலி வகை டாப்ஸ் அணியலாம். இது பெருத்த வயறு மற்றும் தொடைகளின் வடிவத்தை மறைத்துவிடும்.

நார்மலான உடலமைப்பைக் கொண்டவர்கள் ஆங்க்கிள் லெங்த் லெகிங்ஸ், ஃபுல் லெங்த் லெகிங்ஸ் என அனைத்தையும் அணியலாம் என்பதுடன், கால்கள் தெரிவதுபோன்ற டாப்ஸை தைரியமாக அணியலாம். நீளமான சைடு ஸ்லிட்களுக்கும் நோ `தடா'.

பூசிய உடல்வாகு உடையவர்கள் லெகிங்ஸுடன் அனார்கலி மற்றும் 'ஏ'லைன் குர்தாக்களை அணிந்தால் பொருத்தமாக இருக்கும். என்றாலும், நீளமான சைடு ஸ்லிட்டை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் கூடுமானவரை லெகிங்ஸைத் தவிர்த்துவிடுங்கள். ஜெகிங்ஸ், நேரோ பேன்ட்டுடன் 'ஏ'லைன் டாப்ஸ் மட்டுமே அணிவது சிறப்பு.

மினி டாப்ஸுக்கு 'தடா'



லெகிங்ஸ் அணியும்போது நீளம் குறைந்த டாப்ஸைத் தவிர்க்க வேண்டும். சிலர் ஜிம் செல்வதற்கு லெகிங்ஸுடன் ஓவர் சைஸ் ஷர்ட் அல்லது டி ஷர்ட் பயன்படுத்துகிறார்கள். இதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

லெகிங்ஸ் என்பது ஸ்கின்னுக்கு அடுத்தபடியாக இருக்கும் லேயர் போன்றது. இறுக்கிப் பிடிக்கக்கூடிய இந்த உடையில் பெண்களின் அந்தரங்கப் பகுதியின் 'கேமல் டோ (Camel toe)' எனப்படும் வடிவம் ஹைலைட்டாகத் தெரியும். அதனால் அனைத்து விதமான உடல்வாகு உடைய நபர்களும் நீளமான டாப்ஸ் அணிந்தால்தான் உற்று நோக்கும் பார்வையிலிருந்து தப்ப முடியும்.

காலணியிலும் கவனம் தேவை:



லெகிங்ஸுடன் வெஸ்டர்ன் டாப்ஸ் அணியும்போது ஸ்னீக்கர்ஸ், பாலேரினா, ஃபிளாட்ஸ், வெட்ஜஸ் போன்ற காலணிகளை அணிவது சிறப்பு.

எத்னிக் டாப்ஸ் அணியும்போது சாண்டல், கோலாப்புரி, வெட்ஜெஸ், பாயின்டட் ஹீல்ஸ் போன்ற காலணிகளை அணிவது சிறப்பு.





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad