Type Here to Get Search Results !

வில்லன் நடிகர் நவாசுதீன் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட மனைவி ஆலியா; பாக்யராஜ் திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு ‘ரீமேக்’கில் சசிகுமார்

வில்லன் நடிகர் நவாசுதீன் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட மனைவி ஆலியா
ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக் ஆலியா விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

நவாசுதீன் சித்திக் மற்றும் ஆலியா திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன, இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர். அவர் இப்போது விவாகரத்து மற்றும் பராமரிப்பு கோரியுள்ளார். ஆலியாவின் வழக்கறிஞர் நவாசுதீன் சித்திக் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக மே 7 அன்று சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார்,ஆனால் சித்திக்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா டுவிட்டரில் தன்னை இணைத்து கொண்டு சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைவெளிப்படுத்தியுள்ளார்.
தனது சொந்த தவறுகளை மறைக்க நவாசுதீனும் அவரது உறவினர்களும் எனது நற்பெயரைத் கெடுக்க  முயற்சிக்கின்றனர். முழு விஷயத்திற்கும் பின்னால் உள்ள உண்மை என்ன என்பதை உலகுக்குக் காண்பிப்பேன். எனது அமைதி  எனது பலவீனம் அல்ல. டுவிட்டரில் என்னைப் பின்தொடரவும், அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை நான் வெளிப்படுத்துவேன் என கூறி உள்ளார்.

என்னைகுறித்து தவறான தகவல் பரவுவதால்  என்னைப் பற்றிய உண்மையை டுவிட்டரில் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் துஷ்பிரயோகம் செய்வதாலும் உண்மையை மறைக்க முடியாது.

வேறு சில மனிதர்களுடனான தொடர்பு என்பது பொய்யானது தவிர வேறொன்றுமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நான் எந்த மனிதனுடனும் எந்த உறவும் வைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்; அத்தகைய கூற்றுக்களை வழங்கும் எந்த ஊடக தகவலும் முற்றிலும் தவறானவை. கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற அபத்தமான கூற்றுக்களைச் செய்ய ஊடகங்களின் சில பிரிவுகள் எனது புகைப்படத்தை கையாண்டு உள்ளன என கூறி உள்ளார்.

பாக்யராஜ் திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு ‘ரீமேக்’கில் சசிகுமார்
பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட வெற்றி படங்கள் வரிசையில் வசூல் சாதனை நிகழ்த்திய படம் முந்தானை முடிச்சு.

பாக்யராஜ் இயக்கி, கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் 1983-ல் திரைக்கு வந்தது. ஊர்வசி கதாநாயகியாக வந்தார். தீபா, நளினிகாந்த், கோவை சரளா உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்து இருந்தது. இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற ‘அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்’, ‘சின்னஞ்சிறு கிளியே’, ‘கண்ண தொறக்கனும் சாமி’, ‘நான் புடிக்கும் மாப்பிளைதான்’, ‘வா வா வாத்தியாரே வா’, ‘விளக்கு வைச்ச நேரத்திலே’ ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆகி வசூலை குவித்தது.

36 வருடங்களுக்கு பிறகு தற்போது முந்தானை முடிச்சு படம் தமிழிலேயே ரீமேக் ஆக உள்ளது. இதில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார். பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். படத்தை இளம் இயக்குனர் பாலாஜி டைரக்டு செய்கிறார். இந்த படத்தை ஜே. எஸ்.பி. சதீஷ் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதர நடிகர்-நடிகை தேர்வு மற்றும் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்குகின்றன. இன்றைய காலத்துக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad