Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,000-ஐ நெருங்கியது; ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் மாற்றம் - மத்திய அரசு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

இந்தியாவில் கொரோனாவால் 62,939 பேர் பாதிப்பு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3276 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 128 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.   கொரோனாவால் இதுவரை 2,109 பேர் உயிரிழந்த நிலையில், 19,358 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 779 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 3800 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 7796 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம்  இடத்தில் உள்ளது. அங்கு, 449 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1872 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம்  முதல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 6535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1605 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:
அசாமில் 63 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
பீகாரில் 591 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 322 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 169 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 6542 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2020 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 675 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 290 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 134 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 505 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 484 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3708 பேருக்கு பாதிப்பு; 106 பேர் பலி; 2026 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 156 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 78 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 294 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 63 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 9 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1762 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 157 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 67 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 794 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 386 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 823 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1163 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 750 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1786 பேருக்கு பாதிப்பு; 171 பேர் பலி; 372 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1930 பேருக்கு பாதிப்பு; 44 பேர் பலி; 887 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3614 பேருக்கு பாதிப்பு; 215 பேர் பலி; 1676 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3373 பேருக்கு பாதிப்பு; 74 பேர் பலி; 1499 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 50 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 3,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 95 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிற நிலையில், அதன்பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான கொள்கையில் மத்திய அரசு அதிரடியாக மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதுவரை கொரோனா உறுதியாகி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிற ஒருவரை வீட்டுக்கு அனுப்புவது என்றால் 14-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும், அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால், மீண்டும் 24 மணி நேரத்தில் மறுபரிசோதனை செய்ய வேண்டும்.

அப்போதும் கொரோனா இல்லை என்று உறுதி செய்தால் மட்டுமே பாதிப்புக்குள்ளானவர், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

மத்திய அரசின் மாற்றம் செய்யப்பட்ட கொள்கை, தீவிரத்தின் அடிப்படையில் 3 விதங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை வகைப்படுத்துகிறது. அதற்கேற்ப அவர்களது ‘டிஸ்சார்ஜ்’ முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* எச்.ஐ.வி. நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்பட கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களை சிகிச்சை முடிந்து அனுப்பும்போது கொரோனா பரிசோதனை (ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை) செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்து அனுப்ப வேண்டும்.

* மிதமான பாதிப்புக்குள்ளானவர்களை உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் நுகர்வு ஆகியவற்றை கண்காணித்து, 3 நாளில் காய்ச்சல் குணமான நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு ஆக்சிஜன் ஆதரவு இல்லாமல் பராமரித்து, 10 நாட்களுக்கு பின்னர் அனுப்பிவிடலாம். அவர்களை அனுப்பும்போது மருத்துவ பரிசோதனை செய்ய தேவையில்லை. அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

* லேசான, மிகவும் லேசான பாதிப்புடன் முன் அறிகுறி இருந்தவர்களின் வெப்ப நிலையையும், நாடித்துடிப்பையும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். அறிகுறி தோன்றிய 10 நாளில், 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் அனுப்பி விடலாம். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. அவர்கள் வீட்டில் மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் ஆக்சிஜன் நுகர்வு 95 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால், நோயாளி கொரோனா பராமரிப்பு மையத்துக்கு மாற்றப்படுவார்.

அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை ஏற்பட்டால் கொரோனா பராமரிப்பு மையம் அல்லது மாநில அரசின் ஹெல்ப்லைன் அல்லது எண் 1075-ஐ தொடர்பு கொள்ள வேண்டும். அவரது உடல்நிலை 14 நாட்கள் தொலை தொடர்பு சாதனம் வழியாக கண்காணிக்கப்படும். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad