Type Here to Get Search Results !

17-ம் தேதிக்குப் பின் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியா? - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ; சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு; ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியின் குழந்தை பெயர்

17-ம் தேதிக்குப் பின் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியா? - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
17-ம் தேதிக்கு பின்னர் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளிப்பது பற்றி தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்டுள்ள பகுதியில் சென்னையில் இருந்த வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு உணவுபொருள்களை வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி பயணியர் விடுதியில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் அத்தியாவசிய பணிகளுக்காக தமிழக முதல்வர் மாவட்ட நிலைக்கு ஏற்ப ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி கடைகள், தொழில் நிறுவனங்கள் திறக்க அனுமதி கொடுத்துள்ளார்.

சினிமா படபிடிப்பு என்பது லைட் மேன் முதல் இயக்குநர் வரை நூறு முதல் 200 தொழிலாளர்கள் பணிபுரியம் சூழ்நிலை உள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் போது அப்பகுதியில் பார்வையாளராக மக்களும் கூடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் 17-ம் தேதிக்கு பின்னர் சுய ஊரடங்கு எந்த நிலை வருகின்றதோ, அதற்கு ஏற்ப சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார்” என்றார்.


மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 1,460 பீகார் மாநில தொழிலாளர்கள் நாளை தனி ரெயில் மூலமாக அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு
சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இப்போது தொடங்க வேண்டாம் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முற்றிலுமாக முடங்கியிருந்த நிலையில், கடந்த 11-ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2, மாஸ்டர், சக்ரா உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வலிமை படத்தின் பணிகளும் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு படத்தின் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்க்கு அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது.


வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது படக்குழு.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியின் குழந்தை பெயர் - ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad