Type Here to Get Search Results !

10,11,12-ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் இணையத்தில் வெளியிட அரசு தீவிரம்

முதல்கட்டமாக 10,11,12-ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் இணையத்தில் வெளியிட அரசு தீவிரம்
நாடு முழுவதும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்,தமிழகத்தில் தீவரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைளில் ஒன்றாக அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதனால் செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் அடுத்த பருவம் (கல்வி ஆண்டு) மற்றும் செமஸ்டரின்  தொடக்கத்தில் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனைபோல், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிப்பு பணி  துவங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து வகுப்பு பாடங்களுக்கு சுமார் 10 கோடி புத்தகம் அச்சடிக்க மார்ச் 9-ல் டெண்டர் விடப்பட்டது. மார்ச் 3-வது வாரம் டெண்டர் முடிவடைந்து ஏப்ரல் முதல் வாரம் அச்சடிப்பு துவங்கப்படும்.  கொரோனாவால் அச்சகங்கள் மூடப்பட்டிருப்பதால் புத்தகங்கள் அச்சடிப்பு பணி துவங்கவில்லை. ஆனால், அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையதளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வருகிறது. இணையத்தில் பாடப்புத்தகம்  ஏற்றப்படும் தகவலை மாணவர், பொற்றோருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகம் அச்சடிப்பதில் காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 10,11,12-ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் இணையத்தில் வெளியிடப்படுகிறது. 2-ம் கட்டமாக 8 மற்றும் 9-ம்  வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிட பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டிவருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பாட புத்தகங்கள் இன்னும் அச்சடிக்க துவங்காதது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இணையதளத்தில் பாடபுத்தக்கம் வெளியிட்டாலும், கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அம்மாபேட்டையில் நடமாடும் உரம் விற்பனை வாகனம் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
அம்மாபேட்டையில் நடமாடும் உரம் விற்பனை வாகனத்தினை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம், தொழில், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், விவசாய பணிகள் எந்தவித தொய்வுமின்றி தொடர உரம் விற்பனை நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டன.


எனினும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதில் விவசாயிகளுக்கு சிக்கல் நிலவியது. இதனை போக்கும் வகையில் அம்மாபேட்டையில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நடமாடும் உரம் விற்பனை வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று முன்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள், விதைகள் குறித்து தகவல் தெரிவித்தால், விவசாய தோட்டங்களுக்கே நேரில் சென்று வினியோகம் செய்யப்படும். மேலும், வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் நேரில் சென்று விதைகளையும் வழங்குவர் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அசோக், உதவி இயக்குனர் கு.சீனிவாசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணபவா, நிலவள வங்கி தலைவர் சுந்தரராசன், பேரூர் செயலாளர் செந்தில்குமார், ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பாலு, மாவட்ட பிரதிநிதி எஸ்.ராஜு, அண்ணா தொழிற்சங்க தலைவர் பூபதி, ஜெயலலிதா ஒன்றிய பேரவை செயலாளர் ராதா, வேளாண் அலுவலர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad