Type Here to Get Search Results !

உலகின் டாப்10 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்தியக் குடும்பம்!- சொத்து மதிப்பு விவரங்கள்


ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்குடும்பங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பைக் கணக்கெடுத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வால்டன் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் சர்வதேச சில்லறை விற்பனையகமான வால்மார்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இவர்களின் சொத்து மதிப்பு 190.5 பில்லியன் டாலராகும். அரச குடும்பத்தைச் சேராத உலகின் ஒரே பணக்கார குடும்பம் இக்குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாக்லேட் நிறுவனமான மார்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் மார்ஸ் குடும்பம் உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 126.5 பில்லியன் டாலர். 3-ம் இடத்தில், அமெரிக்காவின் இரண்டாம் பெரிய தனியார் நிறுவனமான கோச் நிறுவனத்தை நடத்திவரும் கோச் குடும்பம் இருக்கிறது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர். 4-ம் இடத்தில் சவுதியின் அரச குடும்பமான அல் சவூத் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்.

5-வது இடத்தில் பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஆடை நிறுவனமான சேனலின் வர்தைமர் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 57.6 பில்லியன் டாலராகும். 6-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆடை நிறுவனமான ஹெர்ம்ஸை நிர்வகிக்கும் ஹெர்ம்ஸ் குடும்பம் உள்ளது. இதன் சொத்து மதிப்பு சுமார் 53.1 பில்லியன் டாலர்.7-வது இடத்தில், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஏபி இன்பேவ் நிறுவனத்தை நடத்திவரும் வான் டாம்மே, டி ஸ்போல்பெர்க், டி மெவியஸ் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 52.9 பில்லியன் டாலர்.

8-வது இடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த போஹெரிங்கர், வான் பாம்பாக் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் போஹெரிங்கர் இங்கெல்ஹெய்ம் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறது. இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 51.9 பில்லியன் டாலர். 9-வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் அம்பானி குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 50.4 பில்லியன் டாலர். டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியக் குடும்பம் அம்பானி குடும்பம்தான். பத்தாவதாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்கில் நிறுவனத்தை நடத்திவரும் கார்கில் மேக்மில்லன் குடும்பமாகும். இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 42.9 பில்லியன் டாலர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad