Type Here to Get Search Results !

விவசாயம்... திராவிடம்.... அரசியல் - மாணவர்களிடம் பேசிய கமல்

மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கமல், திராவிடத்தை ஒழிக்க முடியாது என்றார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நியாயமானவர்களாகி விடுவார்கள். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் தம்மை பற்றி பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.


மாணவர்கள் மத்தியில் பேசுவதை தடுக்கின்றனர். பள்ளிக்கு செல்வதையும், கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும் தடுப்பது வேடிக்கையானது என்றும் கமல் கூறினார். விவசாயத்தை மாணவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்று கூறிய கமல், வீட்டிற்கு பக்கத்தில் வயல் இருப்பதற்காக சந்தோசப்பட வேண்டும். கிராமியமே தேசியம் என்று கூறிய கமல் இது விவசாய நாடு. துரித உணவுக்கு தேவையான பொருட்களைக் கூட விவசாயிதான் விளைவித்து தருகிறார் என்றார். இதனையடுத்து மாணவர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார். தென் மாநிலங்களை இணைத்து திராவிட நாடு உங்களால் உருவாக்க முடியுமா என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு கமல் நம்மால் முடியும் என்று கூறினார். திராவிடத்தை ஒழிப்போம் என்று ஒரு சிலர் கூறினார் அதற்கு நான் ஏற்கனவே திராவிடத்தை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளேன். திராவிடம் என்பது இனம், நிலத்தை குறிக்கிறது. திராவிடம் என்பது இந்தியா முழுமைக்கும் இருக்கிறது. மகாராஷ்டிராவிலோ, வட இந்தியாவிலோ நம்மைப்போன்ற முகங்களை காண முடியும். தென்மாநிலங்கள் இணைந்த திராவிட கூட்டமைப்பு உருவாக வாய்ப்புள்ளது. திராவிடத்தை விஞ்ஞானமும், மெய்ஞானமும் நிரூபிக்க முடியும். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களை இணைத்து இணைத்து 6 கைகள் இணைந்த இலட்சினையை உருவாக்கியுள்ளோம் என்றும் கமல் கூறினார். மாணவர்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்றும் கமல் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad