Type Here to Get Search Results !

மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை





அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மெர்சல் திரைப்படதின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இணையதள சேவை வழங்கும் 37 நிறுவனங்களுக்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெர்சல் திரைப்படம் 3,300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ, வடிவேலு, கோவைசரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad