Type Here to Get Search Results !

ஆசிய கோப்பை ஆக்கி:இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை





டாக்கா

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண் கள் ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

இதில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் முதல் 2 இடத்தை தனதாக்கிய மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2-வது சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின. 2-வது சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

சூப்பர்-4 சுற்றில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.

சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவுடன் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அபாரமாக செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவுடன் டிரா கண்டு ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி டிரா கண்டாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்திய அணி லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது நினைவிருக்கலாம்.

முன்னதாக நடைபெறும் ஆட்டத்தில் மலேசியா-தென்கொரியா (பிற்பகல் 3 மணி) அணிகள் சந்திக்கின்றன. மலேசிய அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. தென்கொரியா அணி 2 ஆட்டத்திலும் டிரா கண்டு 2 புள்ளிகளுடன் உள்ளது. இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad