Type Here to Get Search Results !

தலைவலி வரும் வழிகள்




‘தலைவலி என்றாலே தலைவலி’தான் என்று தலையைப் பிடிக்கின்ற அளவிற்கு தலைவலி படுத்தும் பாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒற்றைத் தலைவலி, டென்ஷனால் ஏற்படுகின்ற தலைவலி, வெயிலில் சுற்றுவதால் ஏற்படுகின்ற தலைவலி, பசியால் ஏற்படுகின்ற தலைவலி. ஒரு சிலருக்கு காலையில் எழுந்து அரைமணி நேரத்திற்குள் தேநீர் அருந்திவிட வேண்டும் இல்லாவிட்டால் தலைவலி வந்து விடும்.

தூக்கமின்மை காரணமாக சிலருக்கு தலைவலி ஏற்படும். நீண்ட நேரம் டிவி பார்ப்பதாலும் கணினி பயன்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. மனக் குழப்பம், குடும்ப பிரச்னை கடன் பிரச்னைகள் தலைவலியை ஏற்படுகிறது. கண்களில் பிரச்னை இருந்தால் தலைலி ஏற்படுகிறது. மழையில் நனைவதாலும் தலைவலி ஏற்படுகிறது. இவ்வாறாக தலைவலி பல ரூபங்களில் வந்து மனிதனைப் பாடாய்ப் படுத்துகிறது. பிரச்சனைகள் எளிதாக தலைவலியை கொண்டு வந்துவிடுகிறது.

மூளையைச் சுற்றியுள்ள உறையில் நோய் தொற்று அல்லது இரசாயண மாற்றங்கள் ஏற்படுகின்றபோது தலைவலி வருகிறது. மூளையின் இரத்தக் குழாயில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூளை உறை தாக்கப்பட்டாலும் தலைவலி ஏற்படுகிறது. 

தலைவலிக்கு குட்பை சொல்வது எப்படி?

    சூடான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சிறிது உப்பு போட்டு பருகவேண்டும்.

  புதினாக் கீரையின் சாற்றை நெற்றிப் போட்டில் தடவலாம்.

  சிறிதளவு சீரகம், ஒரே ஒரு கிராம்பு. 2 மிளகு இவற்றைப் பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம்.

    குப்பைமேனி இலையை சுத்தம் செய்து தூளாக்கி, ஒரு சிட்டிகை எடுத்து பொடி போடுவது போல் மூக்கிலிட்டு நசியவிட கடுமையான தலைவலி தீரும்.

 மூன்று கிரால் கிராம்பு, அதே அளவு கறுப்பு வெற்றிலை இவற்றை சிறிது இஞ்சி சாற்றில் வெண்ணெய் போல் அரைத்து நெற்றியில் தடவலாம். 

 வில்வ இலையை உலர்த்திப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டால் தலைவலி மண்டைக் குடைச்சல் சீதல இருமல் தொண்டைக்கட்டு, காசம் தீரும்.

 மூன்று கிராம் மிளகுப்பொடியுடன் ஒருகிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்ட பீனீசம், தலைப்பாரம் நீங்கும்.

   அகத்தி இலையையும் பூவையும் சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து நாசியின் மூலம் இரு துளிகள் உறிஞ்சினால் தலைவலி நின்றுவிடும்.

   வெற்றிலைச்சாற்றை மூன்று சொட்டு அளவுக்கு தலைவலியாக இருந்தால் மூக்கிலும் காது குத்தலாக இருந்தால் காதிலும் தடவினால் காதுவலி நீங்கும்.

   மஞ்சள் துண்டை வேப்பெண்ணையில் நனைத்து நெருப்பில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.

   ஒமத்தை தூள்செய்து மெலிதான சீலையில் முடிச்சுப்போட்டு அதை அடிக்கடி நாசியில் வைத்து முகர்ந்து கொண்டிருந்தால் ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

  குப்பை மேனிச் செடியை இடித்து சாறு பிழிந்து ஒரு டம்பளர் எடுத்துக் கொண்டு அத்துடன் அதேஅளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு தேய்த்து தலை முழுகி வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

   தலைவலி தலைவலி என்று தலையைப் பிடித்துக் கொண்டு இருப்பதை விட தலைவலியை போக்கும் ‘வழி’யை அறிந்து கொண்டால் தலைவலிக்கே தலைவலி தரலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad