Type Here to Get Search Results !

அரசின் திட்டங்களை பாராட்டி மட்டுமே படம் வெளிவரவேண்டும் என சட்டம் கூட வரலாம்: ப.சிதம்பரம் கருத்து








சென்னை,

விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து இந்த படம் வந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.32 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது. இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் டாக்டர்களும் தங்களை அவதூறு செய்வது போன்ற காட்சிகள் வைத்து இருப்பதாக கண்டித்து வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். மருந்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாதாம் என்றும், 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் தர்றாங்க. 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் தர முடியவில்லை என்றும் விஜய் பேசும் சர்ச்சைக்குரிய வசனங்கள் படத்தில் இடம்பெற்று உள்ளன. இந்த வசனம் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக உள்ளது என்று அந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

Notice to film makers: Law is coming, you can only make documentaries praising government's policies.

— P. Chidambaram (@PChidambaram_IN) October 21, 2017
இதனால், சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மெர்சல் படத்திற்கு எதிரான சர்ச்சையை விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்” என்று தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:- ”பராசக்தி படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்” என்று தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் நிலையில் ப.சிதம்பரத்தின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad