Type Here to Get Search Results !

இருட்டு அறையில் முரட்டு குத்து டைட்டிலை பார்த்து ஜெர்க் ஆகாதீங்க



அடல்ட் காமெடி படமான ‘ஹர ஹர மஹாதேவகி’ மூலம் ஆடியன்சை பேச வைத்திருக்கிறார், புது இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். கோலிவுட்டில் ஹீரோ, டைரக்டர், டெக்னீஷியன்ஸ் என ஏராளமான ‘சந்தோஷ்’கள் இருப்பதால், தன் பெயரில் ‘ந்’துக்குப் பதிலாக, ‘ன்’ சேர்த்துக்கொண்டதாக விளக்கம் சொல்லிவிட்டு படபடவென பேச ஆரம்பிக்கிறார். “கதை முடிவானதும் சில ஹீரோக்களை சந்திச்சேன். அதுல, வெங்கட் பிரபுவோட ஹீரோக்களும் இருக்காங்க. கதையை கேட்டுட்டு, பார்க்கலாம்னு சொல்வாங்க. அதுக்கு பிறகு அவங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இருக்காது. இந்த கதையில அவங்க நடிக்கிறாங்களா, இல்லையான்னு கூட சொல்ல மாட்டாங்க. மனசளவுல ரொம்ப கஷ்டப்பட்டேன். சில புரொடியூசருங்க தங்களுக்கு தூக்கம் வர்றதுக்காகவே, மத்தியானம் ரெண்டு மணிக்கு என்னை வரச் சொல்லி கதை கேட்பாங்க.

அடுத்த சில நிமிஷங்கள்ல, அவங்க கிட்ட இருந்து குறட்டை சத்தம் வரும். இப்படி நிறைய அவமானங்களை சந்திச்சுதான் ‘ஹர ஹர மஹாதேவகி’ உருவாச்சு. நான் கடைசியா கதை சொன்ன ஹீரோ, கவுதம் கார்த்திக். துணிச்சலா ஒத்துக்கிட்டார். அதேமாதிரி நிக்கி கல்ராணியோட தில்லையும் பாராட்டணும். இப்ப படம் ரிலீசாகி நல்லா ஓடிக்கிட்டிருக்கு. நிறையபேர் திருட்டுத்தனமா ரசிக்கிறாங்க. ஆனா, அவங்க ரசிச்சதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, என்னை கன்னாபின்னான்னு திட்டுறாங்க. சரி, ‘திட்டத் திட்ட திண்டுக்கல்லு. வைய வைய வைரக்கல்லு’ன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்ற சன்தோஷ், சினிமா புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ் சி.பி.ஜெய்யின் மகன். “எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிச்சேன்.

ஒரு கம்பெனியில கைநிறைய சம்பளத்துக்கு வேலை கிடைச்சது. ஆனா, சினிமா ஆசையால அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்ந்தேன். எம்.சரவணன் கிட்ட, ‘இவன் வேற மாதிரி’ படத்துல ஒர்க் பண்ணினேன். திருப்தியா வெளியே வந்தேன். இப்போ ‘ஹர ஹர மஹாதேவகி’. படத்தை பார்த்துட்டு என்னை கண்டபடி திட்டுவாங்கன்னு தெரிஞ்சேதான் இந்த கதையை பிடிச்சேன். அதேமாதிரி ரெண்டுவிதமா ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. அடுத்து, கவுதம் கார்த்திக்கை வெச்சு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பண்றேன். டைட்டிலை பார்த்து ஜெர்க் ஆகாதீங்க. இது பேய் படம். வழக்கமான பேய் இருக்காது. ரொம்ப வித்தியாசமா இருக்கும்.

இந்த படத்தோட பேய் டிரெண்ட் காலாவதி ஆகும்னு நினைக்கிறேன். ‘ஹர ஹர மஹாதேவகி’யில ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘அய்யோ கொஞ்சம்’னு ரெண்டு பாட்டு எழுதினேன். ‘ஆயா சோத்துல கை’ன்னு இன்னொரு பாட்டு வரும். அதை நானும், கு.கார்த்திக்கும் சேர்ந்து எழுதினோம். அடுத்த படத்துக்கும் பாட்டு எழுதறேன். ஆனா, ஹீரோக்களுக்கு போட்டியா நான் நடிக்க மாட்டேன். என்கிட்ட அற்புதமான பேமிலி வித் காலேஜ் லவ் ஸ்டோரி இருக்கு. மூணாவது படமா அதைத்தான் பண்ணுவேன். கதைக்கு தகுந்த ஹீரோவை தேடுவேன். இல்லன்னா, ஹீரோவுக்கு தகுந்த கதையை எழுதுவேன். எதுவா இருந்தாலும், நல்ல படமாத்தான் பண்ணுவேன். என்னை நம்புங்க” என்று கையெடுத்துக் கும்பிடும் சன்தோஷ் பி.ஜெயக்குமார், காதலித்து ரோஷிணியை கைப்பிடித்திருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad