Type Here to Get Search Results !

கத்திரிக்காய்





கத்திரிக்காய் இல்லாமல் சமையலே இருக்காது என்கிற அளவுக்கு சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்திரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவுக்கு சுவைகூட்டும் கத்திரிக்காய், உடல்நலனுக்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்யக் கூடியது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

 இப்போது நவீன ஆய்வாளர்களும் அதை உறுதி செய்துள்ளனர். கத்திரிக்காயில் இவ்வளவு மருத்துவ பயன்களா என்று நாம் வியக்கும் வகையில் இக்கட்டுரை விரிகிறது.

கத்திரிக்காயின் தாவரப் பெயர் Solanum melongena என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Brinjal என்றும், Egg plant என்றும் குறிப்பிடப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதன் பெயர் வர்த்தகம் என்றும் பீடா பலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தமிழில் வழுதலை, வழிதுணை என்றும் பெயர் உண்டு. கத்திரிக்காய் உருண்டையாகவும், முட்டை வடிவிலுமான ஒரு காய் என்பதால் ஆங்கிலத்தில் இதை Egg plant என்று அழைத்தனர். ஆயுர்வேதத்தில் பண்டகி, பண்டா என்றும் பெயர்கள் உண்டு. இது பத்தியக்கறி பதார்த்தங்களில் ஒன்று. இதன் விதையும் மருத்துவத்துக்குப் பயன்படும். வடிவம், நிறம் இவற்றைக் கொண்டு முட்டைக் கத்திரி, கொத்துக் கத்திரி, நித்தக் கத்திரி, நீலக் கத்திரி, காரல் கத்திரி, முள்ளுக் கத்திரி, கொடிக் கத்திரி, காட்டுக் கத்திரி, செங்கத்திரி, சிறு கத்திரி, பந்தற் கத்திரி, கண்டங்கத்திரி, குத்துக்கண்டங் கத்திரி, ஆகாசக் கத்திரி, கார்க் கத்திரி எனப் பல பெயர்களால் குறிக்கப்படுகிறது.

கத்திரிக்காய் பற்றிய அகத்தியர் பாடல் கத்திரிக்காய் பித்தங் கனன்றகபங் தீர்ந்துவிடும் ெகாத்து சொரி சிரங்கைத் தூண்டிவிடும் - மெத்தவுந்தான்
பிஞ்சான கத்திரிக்காய் பேசுமுத்தோடம் போகும்மஞ்சார் குழலே! வழுத்து! - அகத்தியர் குணபாடம்

கத்திரிக்காயை உண்பதால் பித்த நோய்கள் அத்தனையும் பேசாமல் ஓடி விடும். கபநோய்களான சீதள நோய்கள் சொல்லாமற் கொள்ளாமல் சென்றுவிடும். ஆனால், முற்றிய கத்திரிக்காயை அதிகம் உண்டால் தொற்றுகிற தோல் நோய்களான சொறி சிரங்கை மேலோங்கச் செய்யும். ெபாதுவாகப் பிஞ்சுக் கத்திரிக்காய் உண்பதால் சொல்லப்படுகின்ற வாத, பித்த, கப நோய்களான முத்தோஷ நோய்கள் விலகி விடும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும். எக்கால மும்பழகி யில்லாத மானிடர்க்கு முக்கால முண்டாலும் மோசமிரா - பக்குவமா யங்கந் தணிய வமாபத்தி யக்கறியாம் வங்கக்கா யுண்டறிகு வாய் உண்டு பழக்கமில்லாதவர்களுக்குக் கூட முக்காலம்
உண்டாலும் எவ்வித ேமாசமுஞ் செய்யாது பிஞ்சுக் கத்திரிக்காய் என்று குறிப்பிடுகிறார் தேரையர்.

கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்

கத்திரிக்காய் வலியைப் போக்கும் தன்மையுடையது, காய்ச்சலைப் போக்கக்கூடியது, சோர்வைப் போக்கக்கூடியது, வீக்கத்தைத் தணிக்கக்கூடியது, இரைப்பு நோயைப் போக்கக்கூடியது, கொழுப்பைக் குறைக்கக்கூடியது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது, ரத்த வட்டணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக்கூடியது, கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது, மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்கநிலையைத் தடுக்கவல்லது, உறுப்புகளைத் தூண்டவல்லது.

100 கிராம் கத்தரிக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஊட்டச்சத்து - 1%, மாவுச்சத்து - 4%, புரதச்சத்து - 2%, கொழுப்புச்சத்து - 1%, நார்ச்சத்து - 9% மற்றும் வைட்டமின்
களான போலேட்ஸ் - 5.5%, நியாசின் - 4%, போன்டோதெனிக் அமிலம் - 6%, பைரிடாக்ஸின் - 6.5%, ரிபோஃப்ளேவின் - 3%, தயாமின் - 3%, வைட்டமின் ஏ - 1%, வைட்டமின் சி - 3.5%, வைட்டமின் ஈ - 2%, வைட்டமின் கே - 3%, எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் சோடியம் - 2 மிகி, பொட்டாசியம் - 5% ஆகியவற்றோடு தாது உப்புக்களான சுண்ணாம்புச்சத்து - 1%, செம்புச்சத்து - 9%, இரும்புச்சத்து - 3%, மெக்னீசியம் - 3.5%, மாங்கனீசு - 11%, துத்தநாகம் - 1% ஆகிய வேதிப்பொருட்களும் அடங்கியுள்ளன. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாயுள்ளது. கத்திரிக்காயின் தோலில் உள்ள Anthocyanin என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக்கூடியது அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்கவல்லது. கத்திரி இலைகள் ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், மூச்சுக்குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகிறது. வாயில் எச்சில் சுரக்கவும் பயன்படுகிறது. கத்திரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. கத்திரிக்காய் நோய்வாய்ப்பட்டபோது பத்திய உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதையே தேரையர் கரிசல் என்னும் மருத்துவ நூலில், ‘வழுதலை யாகிய வங்கக் காய் தினப் பழுதிலை யஃதுநற் பத்திய மாகுமே’ என்கிறார். கத்திரிக்காயை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி காலின் வீக்கம் குறைவதற்காக மேற்பூச்சாகப் பூசுவர். கத்திரிப்பழம் இரைப்பு, கோழை வாதக்குற்றங்கள் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது. கத்திரிப்பழத்தை மிகுதியாக உண்பதால் காப்பான் எனும் தோல் நோய்கள், மயக்கந் தரும் பித்த நோய், பெரு நோய் என்னும் குட்ட நோய், பெரும் புண், ஆண்மைக் குறைபாடு, உடல் அனல் இவற்றை உண்டாக்கும்.கத்திரிக்காயின் மருத்துவப் பயன்கள்

*  கத்திரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச்சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும்.
*  கத்திரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது.
*  கத்திரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக்கசிவு குணமாகும்.
*  கத்திரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது.
*  கத்திரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்கவல்லது.
*  கத்திரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்து வர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.
*  கத்திரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துவிட கைகால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும்.
*  கத்திரி பழத்தை வேகவைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும்.
*  கத்திரிக்காயை வேகவைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.
*  வேக வைத்த கத்திரிக்காயோடு போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும். இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.
*  கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு வேகவைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும். மலேரியா காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும். காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும்.
*  கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள்
மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும்.
*  கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துணை செய்யும்.
*  கத்திரிக்காயில் அடங்கியுள்ள சத்துப்பொருட்கள் திசுக்களின் அழிவைத் தடுப்பதோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டி
விடுகிறது.
*  கத்திரிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் ரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது.
*  கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.
*  கத்திரிக்காய் செரிமான உறுப்புக்
களுக்கு பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதாக அமைகிறது.
*  கத்திரிக்காய் நுண்கிருமிகளைத் தடுக்கவல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்கவல்லதாகவும் விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி சத்து இதற்கு துணையாகிறது.
*  கத்திரிக்காயில் அடங்கியுள்ள
வைட்டமின்கள், மினரல்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக்கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற
உதவுகிறது.
*  கத்திரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமை தோற்றத்துக்கு வகை
செய்கிறது.
*  கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது.
*  கத்திரிப்பழத்தை நெருப்பிலிட்டு வேகவைத்து மாடுகளின் வயிற்றுவலி நீங்குதற்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் மடிந்து வெளியேறுவதற்கும் உள்ளுக்கு கொடுப்பதுண்டு.
*  கத்திரிப்பழத்தை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல் வலிக்குக் கொடுக்க பல் வலி குணமாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad