Type Here to Get Search Results !

பெண் களூர் பொண்ணு!




பெங்களூருவை பெண்களூர் என்றும் சொல்லலாம் போலிருக்கிறது. லட்சுமிராய், சஞ்சிதா ஷெட்டி, நந்திதா என்று தமிழ்த் திரையுலகில் தற்போது கோலோச்சும் அழகிகளின் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் சங்கீதாபட். சமீபத்தில் வெளியான ஆரம்பமே அட்டகாசம் மூலம் அட்டகாசமாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஹீரோ ஜீவாவை ஓவர்டேக் செய்யுமளவுக்கு வித்தியாசமான காதலி யாகப் பிரித்து மேய்ந்த சங்கீதாபட்டிடம் செல்லில் பேசினோம்.

அழகுப் புயலின் ரிஷிமூலம்?

பூர்விகம் மங்களூர். பிறந்தது, வளர்ந்தது பெங்களூர். சின்ன வயசிலேயே சினிமா மீது மோகம், தாகம் பிறந்துடுச்சி. ஆனால் அப்பாவுக்கு நான் சினிமாவில் அடியெடுத்து வைப்பது சுத்தமா பிடிக்கலை. அப்பாவை திருப்திப்படுத்த பி.ஏ. சோஷியாலஜி படிச்சி முடிச்சேன். சினிமாவில் எனக்கு இருக்கும் ஒரே சப்போர்ட் அம்மா. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அம்மா சின்ன வயசிலே நடிக்க ட்ரை பண்ணியிருக்காங்க. அப்போ அவங்களுக்கு யாரும் சப்போர்ட் பண்ணலையாம். தன்னுடைய நிலைமை மகளுக்கும் வரக்கூடாது என்று எனக்கு இப்ப ஃபுல் சப்போர்ட் பண்றார்.

சினிமாவுக்கு எப்ப வந்தீங்க?

2009 லேயே சினிமாவுக்கு வந்துட்டேன். கன்னடத்தில் டஜன் படங்கள் பண்ணியிருப்பேன். தமிழிலும் இதுக்கு முன்னாடி டூ, கா...கா...கா... ன்னு  இரண்டு படங்கள் பண்ணிட்டேன். மூன்றாவது படம்தான் ஆரம்பமே அட்டகாசம். ஆனா, நீங்க உட்பட எல்லாருமே இதுதான் என்னோட முதல் படம்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க.

காமெடியனுக்கு ஜோடியா நடிச்சா ஃபீல்டுல நிலைக்க முடியுமா?

நான் அப்படி பார்க்கவில்லை. டூ படத்துல நான் ஹீரோயின். அந்தப் படத்துல ஜீவா காமெடியனா நடிச்சிருந்தார். அப்போதிலிருந்தே ஜீவா எனக்கு நல்ல பிரெண்ட். ஆரம்பமே அட்டகாசம் ஆரம்பித்த சமயத்தில் என்னை தொடர்பு கொண்டு பேசினார். கதை பிடிச்சிருந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன். நான் எதிர்பார்க்காதளவுக்கு முழுக்கதையும் என்னையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு ஹீரோயினுக்கு இதைவிட வேற என்ன பெரிசா வேணும்.

உங்களுக்கு கிளாமர் ஓக்கேவா?

நூறு சதவிகிதம் ஓக்கே. கிளாமரா நடிக்கிறது தப்பில்லை. ஏன்னா, கேரக்டருக்காக நியாயம் பண்றாங்க. கிளாமரான உடல்வாகு இல்லாதவங்கதான் ஸ்கிப்ரிட் டிமாண்ட் பண்ணா எனக்கு ஓக்கேன்னு சுத்தி வளைச்சி பேசுவாங்க. நான் அப்படி இல்லை. அதுக்காக கிளாமரா நடிக்கிறவங்க நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருப்பாங்கன்னு நினைக்கிறது மகா தப்பு. சினிமாவை சினிமா கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். கிளாமர் + ஹோம்லி என்பது கொஞ்சம் ரேர் காம்பினேஷன். என் தோற்றத்துக்கு அது செட் ஆகுது.

செமையான லவ்வரா நடிச்சிருந்தீங்க.... நிஜத்துலே லவ் எக்ஸ்பீரியன்ஸ்?உங்க கேள்வி எப்படி இருக்குதுன்னா, விலைமகள் ரோலில் சிறப்பா நடித்திருந்தால் அவங்களிடம் உங்களுக்கு முன் அனுபவம் இருந்ததால் தான் அப்படி சிறப்பா பண்ண முடிந்ததா என்று கேட்பது போல் இருக்கிறது. ஒரு நடிகை எந்த ஒரு கேரக்டரை ஏற்றுக்கொண்டாலும் அந்தக் கேரக்டருக்கு நியாயம் கற்பிக்க வேண்டும். அப்படித்தான் ஆரம்பமே அட்டகாசம் படத்துல பண்ணியிருப்பேன்.

இந்த மாதிரி படங்களில்தான் நடிக்கணும்னு உங்களுக்கு ஏதாவது லிஸ்ட் இருக்கா?

என்னைத் தேடி ஒரு வாய்ப்பு வந்தாலே அது எனக்கான மரியாதையாகப் பார்க்கிறேன். அதுக்காக அக்கடா துக்கடா கேரக்டர்களையெல்லாம் பண்ணமாட்டேன். உதாரணமா ஆரம்பமே அட்டகாசம் படத்தையே சொல்லலாம். அந்தப் படத்தில் வழக்கத்தைவிட கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தக்கூடிய வெரைட்டி ரோலில் நடிக்க வேண்டும். மத்தபடி, லிஸ்ட் போட்டு நடிப்பதில்லை.

தமிழ்ல யாருடன் நடிக்க ஆசை?

ஒரு நடிகையா எல்லோருடனும் நடிக்க ஆசை. அது ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு நடிகர் மாறிட்டே இருப்பார். இப்போது விஜய் சேதுபதி.

தமிழ் சினிமா, கன்னட சினிமா இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

கன்னட சினிமா முழுக்க முழுக்க கமர்ஷியல் உலகம். அதேபோல் படத்தோட படஜெட், படப்பிடிப்பு நாட்கள் என அனைத்தும் ஒரு லிமிட்ல இருக்கும். ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை. துருவ நட்சத்திரம், 8 தோட்டாக்கள், ப.பாண்டி என்று வித்தியாசமான ஜானரில் படம் பண்ணுகிறார்கள். டெக்னிக்கல் விஷயத்தில் பாலிவுட்டையே ஓரங்கட்டும் அளவுக்கு அசத்துகிறார்கள். வேலை விஷயத்திலும் தீயா வேலை செய்றாங்க. நாற்பது நாள் ஷெட்யூல்னா முப்பது நாளில் முடித்துவிடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எல்லாமே பக்கா ப்ளானோட நடக்குது.

கைவசம்?

தமிழில் இனிமே தான் கமிட் பண்ணணும். கன்னடத்தில் இரண்டு படங்கள் பண்றேன்.

உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள்?

சினிமாவுக்கு அடுத்து எனக்கு பிடிச்ச விஷயம் குக்கிங். ஆனால் நான் சாப்பிடமாட்டேன். ஃபுல் டயட்ல இருக்கிறேன். அம்மாவுடன் சேர்ந்து ஷாப்பிங் பண்ணுவது பிடிக்கும். மொழி வித்தியாசம் இல்லாமல் நிறைய சினிமா பார்ப்பேன்.
 
உங்களின் எதிர்கால லட்சியம்?

சினிமாதான். அதுல ஏன் டவுட்? இளமை இருக்கும் வரை ஹீரோயினா பண்ணுவேன். அதுக்கப்புறம் டைரக்‌ஷன் பண்ணாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே சில ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ணியிருக்கிறேன். தயாரிப்பு நோ ஐடியா. ஆனால் அதுக்கு முன்னாடி  நான் நல்ல நடிகைன்னு பேர் வாங்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad