Type Here to Get Search Results !

ராஜமவுலி மீது புகாரால் பரபரப்பு





பாகுபலி 2ம் பாகத்தின் வசூல் திரையுலகினரை திணறடித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி மீது சிலர் புகார் எழுப்பி உள்ளனர். படத்தின் முதல் மற்றும் 2ம் பாகத்திற்காக பிரமாண்ட அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டன. இதற்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், பைபர், கெமிக்கல் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. படப்பிடிப்பு முடிந்த பிறகு இவையெல்லாம் மலைபோல் குவிந்து கிடக்கிறதாம். இந்த விஷயத்தைத்தான் சிலர் கையிலெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற கழிவுகள் 100 வருடமானாலும் மக்கிப்போகாது.

இதனால் சுற்றுப்புற சூழல் கெடும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் சிலர் மத்திய அரசுக்கு புகார் அனுப்பிவிட்டு காத்திருக்கிறார்களாம். இப்படத்துக்கு முதல் பாராட்டே மத்திய அரசிடமிருந்துதான் கிடைத்தது. மேக் இன் இந்தியா பாணியில் இப்படத்தின் டிஜிட்டல், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கான பணிகளும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்று மத்திய அரசு பாராட்டு தெரிவித்திருக்கிறது.

தவிர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாகுபலிக்கு ஆஸ்கர் விருது தர வேண்டும் என்று கூறி உள்ளார். இந்திய படங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாகுபலி படத்தை உருவாக்கியிருக்கிறார் ராஜமவுலி. அவருக்கு எதிராக புகார் கிளப்புவதா என்று புகார் கூறியவர்கள் மீது நெட்டிஸன்கள் தாக்குதல் தொடங்கி இருக்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad