பாகிஸ்தானிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் பாகுபலி 2
எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 திரைப்படம் வெளியாகி வெற்றிரமாக இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாகுபலி2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களிடம் பாகுபலி 2 படத்தை பார்க்க எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோகருக்கு பாகிஸ்தானில் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானில் இந்தியில் வெளியிடப்பட்டது. அங்கும் பாகுபலி 2 அதிக வரவேற்பை பெற்றுள்ளது. லாகூர், கராச்சி போன்ற இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாகுபலி 2 படத்தை காண அங்குள்ள ரசிகர்கள் வரிசையில் நிற்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.