Type Here to Get Search Results !

எனது பந்துவீச்சால் ஆட்டமிழந்த சங்ககாரா, டிவில்லியர்ஸ் மகிழ்ச்சியில் அஸ்வின்





39 டெஸ்ட் போட்டிகளில், 220 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ள அஸ்வின், சாதனைகளை மனதில் வைத்து ஆடி, நெருக்கடியை ஏற்படுத்தி எனது இயல்பான ஆட்டத்தை இழக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.  சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும்போது எவ்வளவு சிறப்பாக ஆடுகிறோம் என்று கணக்கிட்டு பார்க்க தேவையில்லை. இப்படி சாதனைகளை பார்த்துக்கொண்டு ஆடினால், விளையாட்டில் ஈடுபாடு இருக்காது.  எனவே, நான் எந்த சாதனையையும் நினைத்துக்கொண்டு ஆடுவதாக இல்லை.  கடந்த ஓராண்டாகவே நான் சிறப்பாக விளையாடுகிறேன் என்பதை உணரமுடிகிறது. எனது பந்து வீச்சில் எது தப்பாக மாறியது, எது சரியாக உள்ளது என்பது குறித்து மட்டுமே நான் யோசித்துக் கொள்வது வழக்கம்.  குமார் சங்ககாரா, டிவில்லியர்ஸ், கனே வில்லியம்சன் ஆகிய மிகப்பெரிய துடுப்பாட்ட வீரர்களை எனது பந்து வீச்சில் அடிக்கடி ஆட்டமிழக்க செய்யுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது, இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad