Type Here to Get Search Results !

ஸ்மார்ட்போன் இல்லையென்றால் வாழ்க்கை என்னாகும்





மனித வாழ்வில் தற்போது முக்கிய அங்கம் வகிப்பது ஸ்மார்ட்போன். காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை பார்த்து தான் பலரது பொழுதே விடிகிறது.  அப்படிபட்ட ஸ்மார்ட்போன் ஒருநாள் கையில் இல்லையென்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்.  வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து வேலைக்கு செல்ல வைக்கப்படும் அலாரம் அடிக்காது. அதையும் மீறி வேலைக்கு சென்றால் அடிக்கடி கையில் உள்ள கைகடிகாரத்தை பார்த்து மணியை தெரிந்து கொள்வோம்.  வேலையில் ஏதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் உடனே பாடல் அல்லது வீடியோ பார்ப்போம். போன் இல்லையென்றால் அன்றைய நாள் முழுவதும் தலைவலிதான்.  பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் நமக்கு இன்று யார் யார் எல்லாம் செய்தி அனுப்பியுள்ளார்கள், வாட்ஸ் அப்பில் தற்போது என்ன வைரலாக போய் கொண்டு இருக்கிறது, பேஸ்புக்கில் ரேக்குஸ்ட் கொடுத்தோமே அது என்னாச்சு.  வரும் வழியில் எதாவது ஒரு அழகான இடம் அல்லது ஏதோ ஒரு செயல் நடந்தால் உடனே போனில் வீடியோ எடுத்து அதை தன் நண்பர்களுக்கு பகிர்வோம், இல்லையென்றால் அவ்வளவு தான் மிஸ் பண்ணி விட்டோமே என்று மனம் ஏங்கும்.  யாரேனும் ஒரு நபர் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொன்னால், உடனே மேப்பை ஓபன் செய்து அந்த இடத்தை அறிந்து விடுவோம். போன் கையில் இல்லையென்றால் திண்டாட்டம்தான்.  ஸ்மார்ட் போனின் முக்கிய அம்சமே செல்பி தான், திடீரென்று ஒரு விஐபி உதாரணமாக கிரிக்கெட் வீரர் சச்சின் அல்லது ஒரு பிரபல திரைப்பட நடிகர்களை பார்க்க முற்படும் போது, அருகில் உள்ள அனைவரும் செல்பி எடுப்பார்கள், அப்போது தான் தெரியும் ஸ்மார்ட்போனின் அருமை.  இந்த சின்ன சின்ன விசயங்களை எல்லாம் தாண்டி, வீட்டிற்கு சென்று அந்த ஸ்மார்ட்போனை கையில் தொட்ட பின்பு தான் உயிர் வரும்.  உள்ளங்கை அளவு உள்ள இந்த இயந்திரம் மறுபடியும் உங்களை இயந்திர உலகத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றமில்லை.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad