Type Here to Get Search Results !

200சிசி அப்பாச்சி நவம்பர் ரிலீஸ்! விக்டர், 4 ஸ்ட்ரோக் டிவிஎஸ் 50 மீண்டும் விற்பனைக்கு வருகிறது!











நீண்ட காலமாக சத்தமே இல்லாமல் இருக்கும் டிவிஎஸ் மூன்று புதிய  பைக்குகளை களம் இறக்க தயாராக இருக்கிறது. முதல் கட்டமாக 200சிசி  அப்பாச்சி பைக்கை நவம்பர் முதல் வாரத்தில் களம் இறக்குகிறது டிவிஎஸ்.  இது கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட  டிராக்கன் பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் 200சிசி அப்பாச்சிக்கும் தற்போது விற்பனையில் இருக்கும்  அப்பாச்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. லிக்விட் கூல்டு, ஃப்யூயல்  இன்ஜெக்‌ஷன் இன்ஜின் கொண்ட இது அதிகபட்சமாக 20bhp சக்தியை  வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.   இதற்கு அடுத்தபடியாக 110சிசி  டிவிஎஸ் விக்டர் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவருகிறது டிவிஎஸ்.  சுசூகியுடன் உறவை முறித்ததும் டிவிஎஸ் தனியாக தயாரித்த முதல் பைக்  விக்டர். அதனால் மீண்டும் டிவிஎஸ் விக்டர் பைக்கை விற்பனைக்குக்  கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது. புதிய விக்டர் தோற்றத்தில்  முற்றிலும் புதிய பைக்காக இருக்கும்.  இதுத்தவிர நாடு முழுக்க அதிரடி  வெற்றிபெற்ற மொபட்டான டிவிஎஸ் 50 மீண்டும் விற்பனைக்கு வருகிறது.  4ஸ்ட்ரோக் இன்ஜினுடன் தயாராகி இருக்கிறது புதிய டிவிஎஸ் 50.    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad