‘பிபா’ தேர்தல்: களமிறங்குகிறார் மாரடோனா



                                                      ‘பிபா’ தலைவர் தேர்தலில் ஜாம்பவான் மாரடோனா போட்டியிட உள்ளார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவராக ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார் செப் பிளாட்டர். பின் ஊழல் பிரச்னை காரணமாக  ராஜினாமா செய்தார். புதிய தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் முதல் 2016 மார்ச் மாதத்துக்குள் நடக்கும். இதற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனாவும் குதித்துள்ளார். ஏற்கனவே செப் பிளாட்டர் பதவி விலக வேண்டும் என, பல முறை தெரிவித்து வந்த மாரடோனா, முதலில் ‘பிபா’ துணைத்தலைவர் பதவியை விரும்புவதாக  தெரிவித்திருந்தார்.

                                                      தற்போது தலைவர் பதவியை குறி வைத்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,‘‘தலைவர் பதவிக்கு நானும் ஒரு போட்டியாளர் தான்,’’ என்றார். பிரேசில் முன்னாள் ஜாம்பவான் ஜிகோ, லைபீரிய கால்பந்து சங்க தலைவர் முசா பிலிட்டியும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url