Type Here to Get Search Results !

அஷ்வின் சிறப்பான பந்துவீச்சு




                                                                                    வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் அஷ்வின் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். 
                                                                                     வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மிர்புரில் நடக்கிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பீல்டிங் செய்கிறது. 
                                                                                     வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஜோடி துவக்கம் தந்தது. உமேஷ் ஓவரில் தமிம் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மோகித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சர்கார் அரை சதம் எட்டினார். இவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு தமிம் அரை சதம் அடித்தார். வங்கதேச அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்த போது மழை வர போட்டி பாதிக்கப்பட்டது. இதன் பின் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போட்டி துவங்கியது. அஷ்வின் ‘சுழலில்’ தமிம் (60), லிட்டன் தாஸ் (8) சிக்கினர். முஷ்பிகுர் ரகிம் (14) நிலைக்கவில்லை. வங்கதேச அணி 33 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. சாகிப் (22), சபிர் ரஹ்மான் (27) அவுட்டாகாமல் இருந்தனர். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad