Type Here to Get Search Results !

கோபா அமெரிக்க கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி




                                                                                     கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பிரேசில் அணி 0–1 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
                                                                                   தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, கொலம்பியா உள்ளிட்ட 12 அணிகள் மூன்று பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
                                                                                   சாண்டிகோவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில், கொலம்பியா அணிகள் மோதின. போட்டியின் 36வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் மொரில்லா ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியிலும் பிரேசில் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. போட்டியின் கூடுதல் (90+6) நேரத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட பிரேசில் அணியின் நெய்மர் ‘சிவப்பு அட்டை’ பெற்றார். முடிவில், பிரேசில் அணி 0–1 என தோல்வியடைந்தது. 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad