Type Here to Get Search Results !

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம்

           






               உணவில் தக்காளியைத் தொடர்ந்து  சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்கு தடுக்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்துகொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய்  சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக கூறுகிறார்கள். உலக அளவில் ஆண்களுக்கு இரண்டாவது பெரிய புற்றுநோயாக  புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது.
                       

                        பிரிட்டனில் மற்றும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்ப்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது .


                    பிரிஸ்டல் பல்கலைக்கலகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவரிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.                    
            
                  
                                          

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad